Coimbatore Corporation - 4news 23.04.22

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கனவு மெய்ப்பட வேண்டும் எனும் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாநகராட்சியில் செயல்படும் பெண்கள் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவியர்களில் மருத்துவராக விரும்பிய 27 மாணவியர்களை கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நேரடியாக பார்வையிட்டு தெரிந்துகொள்ளும் வகையில் அம்மாணவிகளை பீளமேடு, பூ.சா.கோ பொறியியல் கல்லூரியில் வளாகத்திலிருந்து பேருந்து மூலமாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று (23.04.2022) கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள். அருகில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு.க.நந்தகுமார் இ.ஆ.ப., இல்லம் தேடிக் கல்வி சிறப்புப்பணி அலுவலர் திரு.கே.இளம்பகவத் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்காரா இ.ஆ.ப., மாநகராட்சி துணை மேயர் திரு.ஆர்.வெற்றிசெல்வன், தொடக்கக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர்.க.அறிவொளி, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.