Coimbatore Corporation - 4News 13.06.22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் மாதிரி சாலையின் ஒருபகுதியாக மிதிவண்டி பாதை (Cycle Track) அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடிக்கவும், தேவைப்படும் இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். உடன் ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் திரு.பாஸ்கர், உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 13.06.2022.