Coimbatore Corporation

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் கோவை நகரில் 24 X 7  குடிநீர் வழங்குவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. மேற்பார்வைப் பொறியாளர் திரு.நடராஜன், மாநகராட்சிப் பொறியாளர் திரு.லட்சுமணன், சூயஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் வர்த்தக மேம்பாடு உதவி துணைத் தலைவர் மகேந்திரா,    கோவை 24 X 7 திட்ட இயக்குனர் சக்திவேல்,  சூயஸ் நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடனுள்ளனர்.