CCMC NEWS 31.01.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட கே.என்.ஜி.புதூர் பிரதான சாலை, வயலட் கார்டன் பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களிடம் அறிவுரை வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தாமணி, உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில் பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) திருமதி.விமலா, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.குமரேசன், சுகாதார ஆய்வாளர் திரு.பௌன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 31.01.2023