CCMC NEWS 17.05.2024 -1

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 16க்குட்பட்ட முருகன் காலனியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (17.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.சந்தியா, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, உதவி பொறியாளர் திரு.ராஜேஸ்வேணுகோபால் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.