CCMC NEWS 16.05.2024 -4

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கே.கே.நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர தலைமைப் பொறியாளர் திரு.அன்பழகன், துணை தலைமைப் பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், உதவி பொறியாளர்கள் மற்றும் சூயஸ் நிறுவனத்தினர் ஆகியோர் உள்ளனர்.