CCMC NEWS 16.05.2024 -3

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.25க்குட்பட்ட காவலர் குடியிருப்பு பகுதியில் சுமார் 19.80 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர தலைமைப் பொறியாளர் திரு.அன்பழகன், துணை தலைமைப் பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், உதவி பொறியாளர்கள் மற்றும் சூயஸ் நிறுவனத்தினர் ஆகியோர் உள்ளனர்.