CCMC NEWS 16.05.2024 -2

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட கிக்கானி பள்ளி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முதன்மை கோட்டப் பொறியாளர் (சேலம் இரயில்வே கோட்டம்) திரு.ஹிரிதியேஷ்குமார் அவர்கள் ஆகியோர் இன்று (16.05.2024) இரயில்வே பாதை அடிப்பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாநகர தலைமைப் பொறியாளர் திரு.அன்பழகன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவி பொறியாளர்கள் மற்றும் சூயஸ் நிறுவனத்தினர் ஆகியோர் உள்ளனர்.