CCMC NEWS 16.05.2024 -1

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட போத்தனூர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முதன்மை கோட்டப் பொறியாளர் (சேலம் இரயில்வே கோட்டம்) திரு.ஹிரிதியேஷ்குமார் அவர்கள் ஆகியோர் இன்று (16.05.2024) குனியமுத்தூர் பகுதியில், பாலக்காடு இரயில்வே பாதைக்கு மேலேயும், பொள்ளாச்சி இரயில்வே பாதைக்கு அடியிலும் பாலம் அமைத்து கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான குறிச்சி - குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பைப் லைன் அமைக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாநகர தலைமைப் பொறியாளர் திரு.அன்பழகன், உதவி ஆணையர் (பொ) திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.