CCMC NEWS 16.04.2024 -1

கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் பயிற்சி திரு.ஆசிக் அலி இ.ஆ.ப., கோயம்புத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோவிந்தன், வடக்கு மண்டல உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, கோவை வடக்கு வட்டாட்சியர் திரு.மணிவேல், உதவி செயற்பொறியாளர் திரு.எழில் உட்பட பலர் உள்ளனர்.