CCMC NEWS 14.05.2024 -2

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இன்று (14.05.2024) தெற்கு மண்டலத்திற்குட்பட்ட இராம செட்டிபாளையம் பகுதியில் செங்குளத்திற்கு நீர் வரக்கூடிய வாய்க்கால் தூர்வாரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் உதவி ஆணையர் (பொ) திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ் ஆகியோர் உள்ளனர்.