CCMC NEWS 11.03.2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.03.2023) கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண்.52 பீளமேடு பி.எஸ்.ஜி ஹட்கோ காலனி பகுதியில் ரூ.1.28 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி ஆய்வு மேற்கொண்டார். அருகில் உடன் மாண்புமிகு வீட்டு வசதித் துறை அமைச்சர் திரு. சு.முத்துசாமி, மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி, மாண்புமிகு கைத்தறித் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.