CCMC NEWS 03.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.46க்குட்பட்ட இரத்தினபுரி, பழனியம்மாள் வீதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார். உடன் மத்திய மண்டலத்தலைவர் திருமதி.மீனா லோகு, உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ். உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர் திரு.பாபு, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 03.02.2023.