CCMC NEWS - 02.05.2024

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று (02.05.2024) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு.தா.கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.வ.சிவ கிருஷ்ணமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.