CCMC NEWS 02.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.61க்குட்பட்ட சிங்காநல்லூர், கல்லிமடை பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.ஆதிமகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திரு.குமார், மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம், உதவி பொறியாளர் திருமதி.ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் திரு.ஜீவமுருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.