Aram foundation forms Aero and Astro club for Corp students

கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவகக் கூட்டரங்கில் இன்று  (14.02.2018)  கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் அறம் பொதுநல அறக்கட்டளை இணைந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளி மாணவ, மனவியர்களுக்காக உருவாக்கும் பிரத்யேக ஏரோ மற்றும் ஆஸ்ட்ரோ கிளப் (Aero and Astro clup ) ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜய்கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்,  அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியின் போது எடுத்த படம். இந்நிகழ்ச்சியில் மாநகர கல்வி அலுவலர் திருமதி.உமா அவர்கள், அறம் பொதுநல அறக்கட்டளை நிர்வாகி திருமதி.லதா சுந்தரம், கோயம்புத்தூர் வானியல் கிளப் தலைவர் திரு.கே.சக்திவேல், முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரி திரு.எஸ்.கௌரிசங்கர், திரு.ஆர்.ரமேஷன், திரு.கே.ஆர்.பாலதண்டபாணி, மாநகராட்சி பள்ளி மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.