2019 polio medical Camp

கோயம்புத்தூர் மாநகராட்சி சீதாலட்சுமி நகர்நல மையத்தில் தேசிய போலியோ நோய் ஒழிப்புத்திட்டத்தின்கீழ் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் மரு.வசந்த் திவாகர் மற்றும் மிட்வுட்  அமைப்பின் நிர்வாகிகள் உடனுள்ளார்கள்.